போகி அன்று தேவையற்ற பொருட்களை எரிக்க வேண்டாம், தேவைப்படுபவர்களுக்கு அதை கொடுங்கள் – சென்னை விமான நிலையம்
போகிப்பண்டிகை அன்று தேவையற்ற பொருட்களை எரிக்காமல் அது தேவைப்படுபவர்களுக்கு கொடுங்கள் என சென்னை விமான நிலையம் வேண்டுகோள் விடுத்து இருக்கிறது.
பொங்கல் முதல் நாளாம் போகி அன்று தேவையற்ற பொருட்களை மக்கள் எரிப்பதுண்டு. கடந்த 2018 ஆம் ஆண்டு இவ்வாறு எரித்ததன் விளைவு காற்று மாசுபாட்டால் விமானம் தரையிறங்க மிகவும் அவதிப்பட்டது. இதனால் மக்கள் பொருட்களை எரிக்காமல் அதை தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க சென்னை விமான நிலையம் வேண்டுகோள் விடுத்து இருக்கிறது.
“ ஏற்கனவே காற்றின் தரம் மிகவும் குறைந்து வருகிறது, போகி போன்ற பண்டிகைகளுக்காக தேவையற்ற பொருட்களை எரிப்பது அது தரத்தை இன்னும் மோசம் ஆக்கி விடும் எனவும் கோரிக்கை விடுத்து இருக்கிறது “