தமிழகத்தில் 2030-ற்குள் அனைத்து ஊராட்சிகளுக்குள்ளும் தடையில்லா குடிநீர்!
தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளுக்குள்ளும் 2030-ற்குள் குடிநீரை நிறைவு செய்ய தமிழக அரசு முடிவெடுத்து இருக்கிறது.
மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினம் வர இருக்கையில், ’2030-ற்குள் தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளுக்கும், அதை சார்ந்திருக்கும் மக்களுக்கும் நன்னீர் சென்று சேர வேண்டும் மற்றும் சுகாதாரமான, சுத்தமான ஊராட்சிகளுக்காக அனைவரும் ஒன்று பட வேண்டும்’ என்ற இலக்கை தமிழக அரசு நிர்ணயித்து இருக்கிறது.
“ இது போக ஒவ்வொரு வாரமும் நடக்கும் கிராம சபைக் கூட்டத்தை, அந்த கிராமத்தை சார்ந்த மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அந்த கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் அரசு கோரிக்கை விடுத்து இருக்கிறது “