ஒன்பது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை – தமிழக அரசு

Due To Heavy Rains Two Days Holiday For 9 Districts School And College In TN
வடகிழக்கு பருவமழை தீவிரமெடுத்து வரும் இந்த சூழலில் சென்னை உட்பட ஒன்பது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை ஆங்காங்கே கொட்டித் தீர்த்து வரும் இந்த சூழலில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்து இருக்கிறது தமிழக அரசு.
“ இயற்கையின் பேரிடருக்கு மாநிலமே ஸ்தம்பித்து நின்றாலும் கூட, அதை வைத்து மகிழ்வு கொள்கின்ற உள்ளங்கள் குழந்தைகளின் உள்ளங்கள் தான். இவ்வளவு நாள் கொரோனோ விடுமுறை தற்போது மீண்டு மழை வெள்ள விடுமுறை “