ஆட்டோ ஓட்டுநர் வங்கி கணக்கில் தவறுதலாக 9000 கோடி வரவு வைத்த பிரபல வங்கி!

சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக 9000 கோடி வரவு வைத்தது பிரபல தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி.

தூத்துக்குடியை மையமாக வைத்து இந்தியா முழுக்க செயல்பட்டு வரும் பிரபல தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக 9000 கோடி வரவு வைத்து, பின்னர் சட்ட உதவிகளுடன் அவர் செலவழித்த 21,000 போக மீதியை திரும்ப பெற்று இருக்கிறது.

“ அதிர்ஷம் அந்த ஆட்டோ டிரைவருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டி, பின்னர் அதே கூரையின் வழியாக எஸ்கேப்பும் ஆகி இருக்கிறது என இணையவாசிகள் இந்த நிகழ்வை கிண்டல் செய்து வருகின்றனர் “

About Author