செங்கல்பட்டு | யூடியூபர் இர்பானின் கார் மோதி மூதாட்டி பலி!
Irfan Car Made An Accident Women Died Idamporul
பிரபல யூடியூபர் இர்பானுக்கு சொந்தமான கார் மோதி மூதாட்டி ஒருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரபல யூடியூபர் இர்பானுக்கு சொந்தமான கார் மோதி, செங்கல்பட்டு மறைமலைநகர் அருகே மூதாட்டி ஒருவர் பலியாகி இருக்கிறார். காரில் விபத்தின் போது இர்பான் இல்லை என்றும் கார் ஓட்டுநர் அசாருதீன் காரை தனியாக ஓட்டி வருகையில் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டு வருகிறது.
“ ஒரு சிலர் காரில் இர்பான் இருந்ததாகவும் கூறி வருகின்றனர், வழக்கில் இருந்து தப்பிக்க கார் ஓட்டுநர் அசாரூதீன் மீது மொத்தமாக இந்த விபத்து சாடல் புகுத்தப்படுகிறது என்றும் கூறி வருகின்றனர் “