திருநங்கைகளுக்கு கல்வி கட்டணம் இல்லை -சென்னை பல்கலைக் கழகம்
University Of Madras
திருநங்கைகள் படிக்க முன்வந்தால் அவர்களுக்கு உரிய கல்வி கட்டணத்தை பல்கலைக்கழகமே ஏற்றுக் கொள்ளும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.
ஒரு புறம் மூன்றாம் பாலினத்தரான திருநங்கைகளை தரத்தில் உயர்த்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், கல்வியில் அவர்கள் பின் தங்கியே இருக்கின்றனர். இந்த நிலையில் திருநங்கைகள் படிக்க முன்வந்தால் அவர்கள் கல்விகட்டணம் செலுத்த தேவையில்லை என்று சென்னை பல்கலைக்கழகம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
“ நிச்சயம் இந்த அறிவிப்பு ஒரு சிறந்த அறிவிப்பாகவே இருக்கும். இதை முன்னெடுத்து பல்வேறு கல்வி நிறுவனங்களும் இதை பின்பற்றினால் மூன்றாம் பாலினத்தினரும் கல்வி தரமும் நிச்சயம் உயர வாய்ப்பு இருக்கிறது “