ஸ்ரீவைகுண்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் தூக்கி வீசப்பட்ட அவலம்!
Flood Relief Products Thrown To People In Srivaikundam Idamporul
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் தூக்கி வீசப்பட்ட அவலம் நிகழ்ந்து இருக்கிறது.
மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிறுக சிறுக மீண்டும் வரும் ஸ்ரீவைகுண்டத்தில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் மக்களிடையே தூக்கி வீசப்பட்ட அவலம் அரங்கேறி இருக்கிறது. நேரடியாக மக்களின் கைகளில் கொடுக்காமல் கூட்டத்தினுள்ளே நிவாரணப் பொருட்கள் தூக்கி வீசப்பட்ட இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.
“ மழை வெள்ளத்தால் வீடுகள் உடைமைகளை இழந்த மக்கள் தூக்கி வீசப்பட்டு சாலைகளில் சிதறிய பொருட்களையும் கூட கைகளால் அள்ளிச் சென்ற அந்த காட்சி பார்ப்போர்களின் மனதை உருக்குவதாக இருந்தது “