மழைக்காலம் முடியும் வரை அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு – தமிழக அரசு
Free Food For All In Amma Unavagam In Rainy Days
தமிழகத்தில் மழைக்காலம் முடியும் வரை அனைத்து அம்மா உணவங்களிலும் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் எல்லா பகுதிகளும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. அதிலும் முக்கியமாக தலைநகரம் ஸ்தம்பித்து உள்ள இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது.
“ காயும் வயிறுகளை குறைந்த பட்ச விலையில் ஆற்றிய அம்மா உணவகம், தற்போது பேரிடரின் போது மக்களின் பசியை விலையில்லாமல் ஆற்றுகிறது என்னும் போது நிச்சயம் இத்திட்டத்திற்கு வேரூன்றியவர்களை நிச்சயம் மனதார பாராட்டியே ஆக வேண்டும் “