தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
Heavy Rain Alert For 8 Districts In Tamilnadu 04 09 23 Idamporul
தமிழகத்தில் எட்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.
நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கோவை, திருநெல்வேலி, திருப்பத்தூர், தூத்துக்குடி ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். இது போக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்து இருக்கிறது.
” இன்னும் மூன்று மாதங்களுக்கு மழை தமிழகத்தை வட மாநிலங்களை போல உலுக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சில வானிலை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர் “