வட இந்தியாவை கதிகலங்க வைத்த மழை, அடுத்தது தமிழகம் தான் எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!
இந்த ஆண்டு வழக்கத்தை விட வட இந்தியாவில் மழை பொழிவு அதிகம் இன்னமும் வெள்ளத்தில் மிதந்து கொண்டு தான் இருக்கிறது. அடுத்தது தமிழகம் தான் என எச்சரித்து இருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வட இந்தியாவை வானிலையும், மழையும் வாட்டி வதைத்து இருக்கிறது. அடுத்ததாக தமிழகம் தான், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் தமிழகத்திற்கு முக்கியமான மாதங்கள், வழக்கத்தை விட இந்த முறை மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.
“ சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், இதர கடலோர மாவட்டங்களுக்கும் கூடுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது “