இருசக்கர வாகனத்தில் பின்னால் அமருபவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் – சென்னை மாநகர காவல் துறை
Chennai New Helmet Rules
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமருபவர்களுக்கும் ஹெல்மெட்டை கட்டாயம் ஆக்கி இருக்கிறது சென்னை மாநகர காவல் துறை.
இரு சக்கர வாகன விபத்து சென்னையில் அதிகமாகி வரும் நிலையில், பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட்டை கட்டாயப்படுத்தி இருக்கிறது சென்னை மாநகர காவல் துறை. ஒரு முறை, இரு முறை விதிகளை மீறினால் கட்டண வசூலிப்பும் அதற்கு மேல் மீறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து இருக்கிறது.
“ ஒரு நல்ல செயலாக்கம் தான், ஆனால் அதை மக்கள் அதை நல்ல நோக்கத்தோடு கடைப்பிடித்து செயல்படுத்திட வேண்டும் என்பதே காவல்துறையின் வேண்டுகோள் “