பணிப்பெண்ணை தாக்கிய விவகாரத்தில், MLA மகன், மருமகள் மீது 6 பிரிவுகளின் வழக்குபதிவு!
பணிப்பெண்ணை தாக்கி சித்ரவதை செய்த விவகாரத்தில், எம் எல் ஏ மகன் மற்றும் மருமகள் மீதி 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
கள்ளக்குறிச்சி திருநருங்குன்றத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் +2 முடித்து விட்டு ஏழ்மை காரணமாக படிப்பை தொடர முடியாமல், திருவான்மியூரில் பல்லாவரம் தொகுதி எம் எல் ஏ அவர்களின் மகனான மதிவாணன் என்பவரின் வீட்டில் பணிப்பெண்ணாக சேர்ந்து இருக்கிறார். தினமும் அந்த வீட்டில் 16 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து வந்த அச்சிறுமியை அவருடைய வீட்டிற்கும் அனுப்பாமல், சம்பளத்தையும் சரிவர கொடுக்காமல், மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் அவரை அடித்து துன்புறுத்தி இருக்கின்றனர்.
அடிப்பது மட்டும் இல்லாமல் அவரை அரை நிர்வாணப்படுத்தி சூடு வைப்பது, முடியை வெட்டி விடுவது, கரண்டி மற்றும் கையில் கிடப்பவைகளை எடுத்து தலையில் தாக்குவது, சாதியின் பெயரை சொல்லி இழிவு படுத்துவது, கடுமையான வேலைகளை செய்ய சொல்லி துன்புறுத்துவது, தண்ணீரில் மிளகாய் பொடி போட்டு வேண்டும் என்றே குடிக்க வற்புறுத்துவது என மாதக்கணக்கில் பல துன்பங்களை அந்த சிறுமி, மதிவாணன் மற்றும் அவரது மனைவியினால் அனுபவித்து இருக்கிறார்.
கடந்த பொங்கல் தின விடுமுறையின் போது தப்பித்தோம் பிழைத்தோம் என சொந்த வீட்டுக்கு வந்த அந்த சிறுமி தனக்கு நடந்த கொடூரங்களை எல்லாம் வீட்டில் சொல்லி அழுது, அதை வீடியோவாகவும் வெளியிடவே அது இணையத்தில் வைரலாகி பேசு பொருளாக மாறியது. தமிழகத்தில் ஆளும் எம் எல் ஏ அவர்களின் குடும்பத்தில் இப்படி ஒரு வன்முறை அரங்கேறி இருப்பதை பலரும் இணையத்தில் தொடர்ந்து கண்டித்து வந்தனர்.
” இது போக சிறுமியின் சார்பில் திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த காவல்துறை, மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் மீது வன்கொடுமை சட்டம் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருக்கிறது “