விழா காலங்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும் – போக்குவரத்து துறை
தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை பாயும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வந்து விட்டால், தனியார் பேருந்துகள் கட்டணத்தை கூட்டி விடுவது தமிழகத்தில் தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. இனிமேல் நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்தை விட தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை பாயும் என போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் பெயரை சொல்லி தகுந்த முறையில் புகார் அளித்தால் நிச்சயம் அந்த பேருந்து நிறுவனத்தின் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
“ வெளிப்படையாக ஆன்லைன்களில், விலை இவ்வளவு என நிர்ணயித்து தான் பெரும்பாலான தனியார் பேருந்துகளி்ன் புக்கிங்கள் நடை பெறுகின்றன. அதை விட பெரிய ஆதாரம் இல்லை என்னும் போது தனியாக புகார் அளித்தால் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது ஏதோ சாக்கு போக்கு சொல்லி நகர்வது போல இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை இணையங்களில் பதிவிட்டு வருகின்றனர் “