மழை நிலவரம் | ’தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்’
Indian Meteorological Department Given Red Alert To Sevan Districts Of TN
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமெடுத்து வரும் நிலையில், ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஒன்பது மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டையும் அறிவித்து இருக்கிறது மண்டல வானிலை ஆராய்ச்சி மையம்.
திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் கொடுத்து இருக்கிறது மண்டல வானிலை ஆராய்ச்சி மையம்.
” ஆங்காங்கே மழை நீர் இன்னமும் வடியாத நிலையில், கனமழை நீடிக்க கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து இருப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது “