தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்க்கும் கர்நாடக பாஜக!
Karnataka BJP Protesting Against Releasing Further Kaveri Water Idamporul
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து, கர்நாடக பாஜக கர்நாடாவில் போர்க்கொடியை தூக்கி இருக்கிறது.
தமிழகத்திற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறப்பதை எதிர்த்து கர்நாடக பாஜக, கர்நாடக முழுக்க மக்களை தூண்டி விட்டு போராட்டம் மேற்கொண்டு வருகிறது. தமிழக விவசாயிகளை மனதில் கொண்டே இந்த நீர் திறப்பு, இதுவே தமிழக பாஜகவாக இருந்தால் தண்ணீர் திறக்க சொல்லி போராட்டம் நிகழ்த்தும். பாஜக ஒரு அரசியல் பச்சோந்தி. அது சூழ்நிலைக்கு ஏற்றார் போல தங்களை மாற்றிக்கொண்டே இருக்கும் என டி கே சிவக்குமார் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
“ பாஜகவின் நீர் அரசியலுக்கு மட்டும் அல்ல, ஒட்டு மொத்த அரசியலுக்கும் கசையடி போல டி கே சிவக்குமார் பதிலடி கொடுத்து இருக்கிறார் என இணையவாசிகள் சிவக்குமார் அவர்களின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் “