பெருகும் லோன் செயலி மோசடி, சிக்கித் தவிக்கும் பொது மக்கள்!
லோன் செயலி மூலம் பணம் கொடுப்பது போல கொடுத்து விட்டு அவர்கள் பணத்தை திரும்ப செலுத்தினாலும் கூட தொடர்ந்து அவர்களை டார்ச்சர் செய்யும் நிலை பெருகி வருகிறது.
சென்னையில் ஒரு இளம் பெண் ஒரு அவசர தேவைக்காக, பியோனி கேஷ் என்ற செயலி மூலம் 12,000 லோன் எடுத்து இருக்கிறார். அதை குறிப்பிட்ட காலத்தில் கட்டிய போதும் கூட கட்டவில்லை என்று ஆபாச வார்த்தைகளால் தொடர்ந்து அந்த பெண்ணை மிரட்டி தற்கொலை எண்ணத்திற்கு போகும் அளவிற்கு தூண்டி இருக்கின்றனர்.
இது மட்டும் அல்லாது, ’ஏற்கனவே பணத்தை செலுத்தி விட்டேன் இனி என்னால் பணம் கட்ட இயலாது’ என்று அந்த பெண் கூறியதும், அந்த பெண்ணின் மொபைலில் இருக்கும் அவரின் உறவினர்களின் நம்பர்களை எடுத்து, அந்த பெண்ணின் முகத்தை மார்ப் செய்து ஆபாசமாக படங்களை அனுப்பி, அந்த பெண்ணிற்கு இருக்கும் ஒரு நல்ல இமேஜையும் சிதைத்து இருக்கின்றனர்.
“ தொடர்ந்து இது போல லோன் செயலி மூலம் பொதுமக்களை சைபர் திருடர்கள் மிரட்டுவது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் “