நிரம்பும் மேட்டூர் அணை | காவிரி கரையோர மக்களுக்கு அரசு விடுக்கும் எச்சரிக்கை!

mettur dam reaching towards full capacity cauvery coastal warning

mettur dam reaching towards full capacity cauvery coastal warning

இன்னும் 48 மணி நேரத்தில் மேட்டூர் அணை நிரம்பி விடும் என்றும், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று எச்சரிக்கையுடன் இருக்கவும் அரசு சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது.

பிலிகுண்டுவிலிருந்து வரும் 28,000 கனஅடி நீரும், பாலாற்றில் இருந்து வரும் 4000 கனஅடி நீரும் மொத்தமாக மேட்டூர் அணையை நோக்கி வந்து கொண்டு இருப்பதால் இன்னும் 48 மணி நேரத்தில் மேட்டூர் அணை 120 அடி என்ற அதன் முழு கொள்ளளவை எட்ட இருக்கிறது. இதனால் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அரசு சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது.

நாளை (09-11-2021) மாலை தனது முழு கொள்ளளவை எட்ட இருக்கும் மேட்டூர் அணையிலிருந்து, வர இருக்கும் நீர் வரவை பொறுத்து 30000 கன அடி நீர் அளவுக்கு நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக சேலம் மாவட்டம் சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. நீர் எந்த நேரத்திலும் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதால் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“ ஏற்கனவே ஒரு நாள் மழைக்கே வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சென்னை, தமிழகத்தில் ஆங்காங்கே கொட்டி தீர்க்கும் கனமழை, நிரம்பும் அணைகள், ஒரு வகையில் பயன், ஒரு வகையில் பயம் என்று இரண்டு தரப்பிலும் யோசிக்க வைக்கிறது இயற்கையும் வானிலையும் “

About Author