தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் கைப்பேசிக்கு தடை!
Cell Phones Restriction In Temple Idamporul
தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் கைப்பேசிக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு.
கோவில்களின் தூய்மை மற்றும் புனிதத்தினை கருதி, இந்து சமய அறநிலைய துறையின் கீழ் தமிழகத்தில் இருக்கும் அத்துனை கோவில்களிலும் கைப்பேசிக்கும், முறையற்ற உடை அணிவதற்கும் தடை விதித்து இருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம். இத்தடை வெகுவிரைவில் அனைத்து கோவில்களிலும் அமல்படுத்தப்பட இருக்கிறது.
“ வெளிநாட்டவர்களுக்கும் இத்தடை பொருந்துமா, மற்றும் இத்தடைகள் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு இத்தடை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது “