நாங்குநேரி சம்பவத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் கடும் கண்டனம்!
நாங்குநேரியின் சின்னத்துரை என்ற மாணவருக்கு நடந்த கொடுமைக்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
நாங்குநேரியை சேர்ந்த சின்னத்துரை என்ற பட்டியலின மாணவர் ஒருவரை, சகமாணவர்கள் சிலர் சாதிய ரீதியாக பல துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் தாய் அம்பிகாவிடம் பள்ளிக்குச் செல்ல மறுத்து இருக்கிறார் சின்னத்துரை. என்ன விவரம் என்பதை அறியவுமே தாய் பள்ளி முதல்வரிடம் இது குறித்து முறையிட்டு இருக்கிறார்.
பள்ளி முதல்வரும் சகமாணவர்களை கடுமையாக கண்டித்து, இனி இது போல் நடந்தால் பள்ளியை விட்டு நீக்கி விடுவேன் என எழுதி வாங்கி அனுப்பி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் இரவு நேரத்தில் சின்னத்துரையின் வீட்டிற்கு சென்று சின்னத்துரையையும், அவரது தங்கையையும் சரமாரியாக வெட்டி இருக்கின்றனர். தற்போது இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்க்பபட்டு இருக்கின்றனர்.
ஒரு 17 வயது மாணவன் சின்னத்துரை மீது நிகழ்த்தப்பட்ட இந்த சாதிய ரீதியான தாக்குதல்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் சின்னத்துரைக்கு ஆறுதல் கூறி விட்டு, சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும் என ஆத்திரத்துடன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
” இப்பலாம் யார் சாதி பார்க்கிறார்கள் என்று வீர வசனம் பேசினாலும், சாதி என்னும் ஆதிக்கமும், அதனால் இன்னல் படுபவர்களும் இன்னமும் நம்முடன் இருக்க தான் செய்கிறார்கள், அவர்கள் அப்படித்தான், இவர்கள் என்றால் இப்படித்தான் என்று பழக்கப்படுத்தி விட்டார்கள் “