நாங்குநேரி சம்பவம் | காவல் நிலையத்தில் சிரிப்பு சத்தம், மருத்துவமனையில் அலறல் சத்தம்!
நாங்குநேரியில் படிக்கும் மாணவர்கள், சக மாணவன் ஒருவரை சாதிப்பற்று கொண்டு வெட்டி இருப்பது தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
17 வயது மாணவனையும், அவளின் 13 வயது தங்கையையும் வெட்டி சம்பவத்தை செய்த மாணவர்கள் அதை துளி கூட உணராமல் காவல் நிலையத்தில் நண்பர்களுடன் சிரித்துக் கொண்டு இருக்க, மருத்துவமனையில் வெட்டு பட்ட மாணவனின் குடும்பத்தின் அலறல் சத்தம் தமிழகத்தையே கதிகலங்க வைத்துக் கொண்டு இருக்கிறது.
இதற்கெல்லாம் யார் காரணம், பள்ளி மட்டுமே ஒரு மாணவனை எல்லா வகையில் சிறந்தவனாய் சமூகப் பற்று உள்ளவனாய் மாற்றி விட முடியுமா என்றால் இல்லை தான், அதை தாண்டி வீடும் பெற்றோருமே இங்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர். சாதிப் பெருமையை ஊட்டி ஊட்டி வளர்க்கும் பெற்றோர்கள், சகமனிதனை மனிதனாய் பார்க்க கற்றுக் கொடுத்து இருந்தால் இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டு இருக்கலாம்.
“ சக மாணவனை நண்பனாக பார்க்க முடியாமல், சாதியாக ஒரு மாணவன் பார்க்கிறான் என்றால், அதற்கு முழுக்க முழுக்க அவனுடைய பெற்றோரும் இந்த சமூகத்தில் இன்னமும் வேரறுக்கப்படாமல் இருக்கும் சாதியீயமும் காரணம் “