அடுத்த மூன்று நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை இருக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்
South TN Rains Rain Possibilities For Next Three Days 15 12 23 Idamporul
அடுத்த மூன்று நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. மழை அறிவிப்பை அடுத்து மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன.
“ தென் தமிழகத்தில் மழை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் அந்தந்த மாவட்டங்களில் மேற்கொண்டு வருகின்றன “