தொடங்கியது வடகிழக்கு பருவமழை, ஏழு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. கிட்டதட்ட ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்று தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து இருக்கிறது.
தென் வங்கக்கடலின் மத்தியபகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்னும் 48 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில், கனமழை பெய்யக்கூடும் என்று தமிழக மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை விடுத்து இருக்கிறது.
ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை துவங்கியுள்ள நிலையில், இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து காற்றத்தழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கும் போது, இந்த மழை கன மழையாக உருவெடுக்க கூடும் என வானிலை ஆய்வு தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
“ மழை அறிவிக்கப்பட்டுள்ள ஏழு மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரம் ஆக்க தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இது போக ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்த்தவும் எல்லா மாவட்டங்களுக்கும் தமிழக அரசு அறிக்கை விடுத்து இருக்கிறது. மக்கள் தங்களையும் தங்களது உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது “