ஆன்லைன் லோன் செயலியினால் தற்கொலை செய்து கொண்ட 22 வயது இளைஞர்!
ஆன்லைன் லோன் செயலியினால் நாமக்கலை சேர்ந்த 22 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாமக்கலை சேர்ந்த லோகேஸ்வரன் என்ற 22 வயது இளைஞர், ஆன்லைன் லோன் ஆப் மூலம் வாங்கிய 15,000 ரூபாய் கடனை திருப்பி கொடுக்க முடியாத காரணத்தினாலும், அது பெற்றோருக்கு தெரிந்த காரணத்தினாலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பது தமிழகம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்ஸ்டன்ட் லோன் ஆப்களே முதலில் ஆபத்தானவைகள் தான், அந்த ஆப்கள் உங்கள் மொபைலின் ஒட்டு மொத்த தகவல்களையும் திருடிக் கொண்டு தான் முதலில் உங்களுக்கு லோனை வழங்கும். பின்னர் குறுகிய காலம் நேரம் கொடுத்து உங்களை உடனடியாக திருப்ப கோரிக்கை வைக்கும். திருப்பி செலுத்த முடியவில்லை எனில் உங்களது போனில் இருக்கும் தகவல்களை வைத்து மிரட்டி பணம் பறிக்கும். இது தான் அவர்களின் செயல்முறை.
“ இந்த லோன் ஆப்களினால் தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்டு வர தான் செய்கிறார்கள், அரசு தலையிட்டு முறையான நடவடிக்கை எடுக்க பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் “