வானிலை நிலவரம்: தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு கன மற்றும் மிக கனமழை எச்சரிக்கை!
Orange Alert Declared In Various Parts Of TamilNadu
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கன மற்றும் மிக கன மழை பெய்யக்கூடும் என்று மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்ககடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு, மெதுவாக மேற்கு நோக்கி நகரும் வாய்ப்பு அதிகரிப்பதால், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழைபெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“ பேரிடர் பாதுகாப்பு முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுக்க சொல்லி அந்தந்த மாவட்டங்களுக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பற்ற முறையில் கரையோர இடங்களில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.