தமிழகத்தில் ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
Orange Alert For 6 Districts In Tamilnadu 08 11 23 Idamporul
தமிழகத்தில் ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுத்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.
தென் இந்தியப்பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடும் மழைப் பொழிவு இருக்க கூடும் என்பதை கருத்தில் கொண்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் கொடுத்து இருக்கிறது.
“ எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க கோரி தமிழக அரசு மாவட்ட நிர்வாகங்களை அலர்ட் செய்து இருக்கிறது “