அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் – முதல்வர் அறிவிப்பு!
Pongal Gift For All Family Card Said CM Stalin Fact Here Idamporul
அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.
வருமான வரி செலுத்துவோர், அரசு வேலையில் இருப்போர், சர்க்கரை அட்டைதாரர் உள்ளிட்டோருக்கு பொங்கல் பரிசு ஆயிரம் இல்லை என்ற அறிவிப்பு ஒரு குறிப்பிட்ட மக்களிடையே குழப்பத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருந்த நிலையில், அனைத்து அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு உண்டு என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
“ ஏற்கனவே பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், அனைத்து அட்டை தாரர்களுக்கு டோக்கனை கொடுக்க வலியிருத்தி இருக்கிறது தமிழக அரசு “