இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கருத்து தெரிவித்து இருக்கிறது.
தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் சராசரி வெயில் 100 டிகிரியை தொட்டு வரும் நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் அதன் உட்புற பகுதிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமழை மற்றும் கனமழை பரவலாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
“ வாட்டி வரும் வெயிலுக்கு இதமாய் மழை பெய்தால் நன்றாக தான் இருக்கும். மழை பொழியட்டும். மக்களின் மகிழ்விற்காக மேகம் துளி போடட்டும் “