வங்ககடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு, தென் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை!
Rain Possibility In South TN Idamporul
வங்ககடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வின் காரணமாக தென் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
பருவமழை வட தமிழகத்தில் நிறைவாக பொழிந்து இருந்தாலும், இந்த முறை தென் தமிழகத்தில் மழை என்பது குறைவு தான். ஆனால் தற்போது வங்க கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு வரும் டிசம்பர் 25 காலக்கட்டங்களில் தென் தமிழகத்திற்கு நல்ல மழையை கொடுக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
“ வட தமிழகம் தொழிற்சாலைகளை நம்பி இருந்தால், தென் தமிழகம் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி இருக்கிறது. பொழிந்தால் நன்றே “