தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து இருக்கும் வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து அறிக்கை விட்டு இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.
விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், சென்னை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் அதீத மழை பொழியும் ரெட் அலர்ட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த ரெட் அலர்ட் டிசம்பர் 8 முதல் 10 வரை மேற்கூறிய பகுதிகளில் நீடிக்கும்.
“ பெரும்பாலும் ரெட் அலர்ட்டில் இருக்கும் மாவட்டங்கள் எல்லாம் சென்னையை சுற்றிய பகுதிகள் தான். இதனை கருத்தில் கொண்டு 6 தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் தமிழகத்திற்கு விரைந்து இருக்கின்றன “