யூடியூபர் ‘சாட்டை’ துரை முருகன் திருநெல்வேலியில் கைது!
குமரியில் மலைகள் தகர்க்கப்பட்டு கனிமவளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் மற்றும் அரசின் செயல்பாடுகளை மிகவும் கொச்சையாக விமர்சிக்கும் விதத்தில் பேசியதாக, ‘சாட்டை’ துரை முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குமரியில் நடைபெற்ற கனிமவள சுரண்டலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்று இருந்த ‘சாட்டை’ துரைமுருகன் அவர்கள், அதில் முதல்வர் குறித்தும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் மிகவும் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் மீது 7 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து திருநெல்வேலி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
“ ஒரு அரசின் செயல்பாடுகளையும், அதன் கீழ் இயங்கும் பிரநிதிகளையும் இங்கு எவருக்கும் விமர்சிக்க உரிமை உண்டு. ஆனால் அந்த விமர்சனம் தவறை சுட்டிக் காட்டும் சுட்டு வார்த்தைகளாகவும் ஆரோக்கியமானதாகவும் இருத்தல் வேண்டும். தனிமனித தாக்குதலாகவோ, ஆபாச வார்த்தைகளாகவோ இருப்பின் அது ஆரோக்கியமான விமர்சனத்தில் சேராமல் ஒரு வித வன்மத்தில் சேர்ந்து விடும் என்பதே இங்கு பலரின் கருத்தியல் “