1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் – தமிழக அரசு
1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு நவம்பர் 1 அன்று பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
பெற்றோர்கள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்த பிறகு, 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள், நவம்பர் 1 அன்று திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்த பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
பள்ளிகளை சீரமைக்கும் பணிகள், துப்புரவு செய்யும் பணிகள் சில நாட்களாக தமிழகம் முழுக்க நடந்து வருகிறது. இரண்டு வருடங்களுக்கு புத்தப் பையை எடுத்து முதுகில் கட்டி பிள்ளைகளை அனுப்புவது தான் இனி சிரமம்.
“ எப்படா பள்ளிகள் திறக்கும் என்று மாணவர்களை விட அதிகம் ஏக்கம் கொள்வது ஒரு சில பெற்றோர்கள் தானாம், சமாளிக்க முடியவில்லையாம். பெரும்பாலான குழந்தைகளின் சேட்டைகளை எல்லாம் சமாளிக்க இன்றைய சூழலில் பெற்றோர்கள் உபயோகிக்கும் வார்த்தை ‘இரு உன்ன நாளைக்கு ஸ்கூலுக்கு அனுப்புறேன் பாரு’ என்பது தான். “