தென் தமிழகத்தில் விடாது கொட்டித் தீர்க்கும் மழை!
Tamilnadu Rains South Tamilnadu Will Get Intense Rain Next 48 Hours Idamporul
தென் தமிழகத்தில் கடந்த 12 மணி நேரமாக மழை விடாது கொட்டித் தீர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தென் தமிழக பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விட்டு இருக்கும் நிலையில், கடந்த 12 மணி நேரமாக திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் மழை விடாது கொட்டித்தீர்த்து வருகிறது. தாமிரபரணி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மழையின் அளவு 30 சென்டி மீட்டருக்கும் அதிகமாக இருக்க கூடும் என்பதால், அனைத்து தென் தமிழக மலைப்பகுதி அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஓடைப்பகுதிகளிலும், மலையோர வாய்க்கால் பரப்புகளிலும் மக்கள் நடமாடாமல் இருக்கவும் அறிவுருத்தப்பட்டுள்ளனர்.
“ திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் தண்ணீர் தேங்கும் பகுதிகளையும், வெள்ளம் வரக்கூடிய பாதைகளையும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கையாகவும் உன்னிப்பாகவும் கவனித்து வருகிறது “