பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு இடம்பெயரும் இலங்கைத் தமிழர்கள்!
Sri Lanka Under Economic Emergency People moving To Other Country
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், இலங்கை வாழ் தமிழர்கள் பலரும் தொடர்ந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.
இலங்கை தொடர்ந்து பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அத்தியாவசிய பொருள்களின் விலை எல்லாம் அங்கு பன்மடங்காக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு வாழ்வினை சமாளிக்க முடியாத பலரும் தோணிகளின் வாயிலாக தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
“ ஒரு சிலிண்டரின் விலை நான்காயிரம், அதற்கும் கூட பெரிய தட்டுப்பாடு, மக்கள் தினமும் அத்தியாவசிய பொருள்களுக்கே திண்டாடி வருகின்றனர். என்ன நடவடிக்கை எடுக்க போகிறது இலங்கை என்று ஒட்டு மொத்த மக்களும் அரசை உற்று நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றனர் “