12 தமிழக மீனவர்களை மீண்டும் கைது செய்த இலங்கை ராணுவம்!
Tamilnadu Fisherman 12 Members Arrested By India Navy
தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்து படகினையும் கைப்பற்றி இருக்கிறது இலங்கை ராணுவம்.
தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்து இருக்கிறது இலங்கை கடற்படையினர். பிழைப்பிற்காக மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு, படகுகளை சேதப்படுத்துவது என்று எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது இலங்கை கடற்படை.
“ எந்த கட்சி என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் தொடர்ந்து எல்லைப் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மட்டும் நின்ற பாடில்லை. தொடர்ந்து நடந்து கொண்டு வரும் இந்த நிகழ்வுகளுக்கு என்று தான் முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது ஒன்றிய அரசு”