தமிழகத்தில் கிட்டதட்ட 1 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை!
கொரோனா வேகமாக பரவும் இந்த சூழலில் தமிழகத்தில் கிட்ட தட்ட 1 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
கொரோனா, ஒமிக்ரான் என்று சூழ்நிலை வேறு மாறி ஆகிக் கொண்டு இருக்கும் இந்த சூழலில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசிக்கு தகுதியானவர்களில் 95 லட்சத்திற்கும் மேலானோர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்ற உண்மை அம்பலமாகி இருக்கிறது.
பெரும்பாலும் இரண்டாவது தவணை எடுத்துக்கொள்ளாதவர்கள், முதல் தவணையின் போது ஏற்பட்ட சின்ன சின்ன பக்க விளைவுகளால் மட்டுமே இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை என்ற தகவல் விசாரித்ததில் வெளியாகி இருக்கிறது.
“ இரண்டாவது தவணையை மட்டும் முறையாக அந்த 95 லட்சம் மக்கள் எடுத்திருந்தால் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசிக்கு தகுதியானவர்களின் எண்ணிக்கை 85 சதவிகிதத்தை அடைந்து இருக்கும் “