தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை இருக்க கூடும் என்ற தகவல் கிடைத்து இருக்கிறது.
த்மிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளிலும் அடுத்து வரும் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை இருக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே மழை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆரம்பித்து விட்டதாக கூடுதல் தகவல்.
“ வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில், இந்த மழை சற்றே கொஞ்சம் நிலத்தின் வெட்கையை தணிக்கும் “