தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேறியது நீட் எதிர்ப்பு மசோதா!
தமிழக சட்டசபையில் நீண்ட விவாதத்திற்கு பின் மீண்டும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது நீட் எதிர்ப்பு மசோதா.
ஆளுநர் அரசு சார்பில் அனுபப்பட்ட நீட் எதிர்ப்பு சட்ட வரைவை திருப்பி அனுப்பிய நிலையில் இன்று மீண்டும் சட்டசபை கூடி, ஏகபோக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் திரும்பவும் நீட் எதிர்ப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பாஜக மட்டும் தனித்து இந்த மசோதாவிற்கு எதிராக குரல் கொடுத்து கொண்டு இருந்தது.
“ மிகப்பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு இருக்கும் நீட் எதிர்ப்பு மசோதா நிறைவேறும் வரையிலும், தமிழக மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை 7.5 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்த ஜெகன் மூர்த்தி அவர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார் “