தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் முழு நேர ஊரடங்கு அமல் – சுகாதாரத்துறை
TamilNadu Government Announce Sunday Lockdown
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
கொரோனா பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. இது போக மாநிலமெங்கும் கல்லூரிகளுக்கு ஜனவரி 20 வரை விடுப்பு விட இருப்பதாகவும் தமிழக அரசு அறிக்கை விடுத்து இருக்கிறது.
“ இது போக ஒன்று முதல் ஒன்பது வரையிலான பள்ளி வகுப்புகளுக்கு மீண்டும் ஆன்லைன் கிளாஸ்களை மீண்டும் அமல் படுத்தி இருக்கிறது தமிழக அரசு “