அறிவிக்கப்பட்டு இருந்த ‘புத்தகப்பை இல்லா தினம்’ திடீரென ரத்து!
Tamilnadu Government Cancelled No Bag Day
தமிழக பள்ளி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்த ‘புத்தகப்பை இல்லா தினம்’ திடீரென ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
ஆந்திர அரசு முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு ‘புத்தகப்பை இல்லா தினம்’ ஆக அறிவித்து இருந்தது. அது போல தமிழகத்திலும் 6-8 வகுப்புகளுக்கு பிப்ரவரி 26 அன்று ‘No Bag Day’ அனுசரிக்கப்படும் என்று அறிவித்து இருந்த நிலையில், தற்போது அது ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
” கொரோனா என்னும் பேரிடரில் ஏற்கனவே மாணவர்கள் கல்விக்கு பெரிதும் இடையூறு ஆகி விட்டதால், இருக்கும் நாளில் ஆவது கல்வியை திறம்பட போதிக்க வேண்டும் என்று பல்வேறு பக்கமும் இருந்து கருத்துக்கல் எழும்பியதால், ‘No Bag Day’ கை விடப்படுவதாக தமிழக கல்வித்துறை அறிவித்து இருக்கிறது “