மீண்டும் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்!
TN Government Online Gambling Restriction Bill Idamporul
மீண்டும் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முனைந்து இருக்கிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆன்லைன் சூதாட்ட மசோதாவை நான்கு மாதத்திற்கு பின் திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக அரசு மீண்டும் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்து இருக்கிறது. பட்ஜெட் கூட்ட தொடரோடு மீண்டும் தடை சட்டத்தை நிறைவேற்ற அரசு முடிவெடுத்து இருக்கிறது.
“ ஒரு முக்கிய சட்டத்திற்கான மசோதாவை நான்கு மாதம் கிடப்பில் போட்டு விட்டு அதை நிராகரிப்பது என்பது மக்களிடையேயும், அரசியல் தலைவர்களிடையேயும் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது “