சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டம்!
New Railway Line Near To Kilambakkam Bus Terminal Idamporul
சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் ஒன்றை அமைக்க தமிழக அரசு திட்டம்.
பெருநகர போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை கிளாம்பாக்கத்தில் புதியதாக அமைந்து இருக்கும் தென் மாவட்டங்களுக்கான புதிய பேருந்து நிலையத்தை மக்களுடன் எளிதாக இணைக்கும் விதமாக கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் ஒன்றை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. முதற்கட்டமாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் இருந்து 20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
“ ஒன்றியத்தில் இருந்து நிதியை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தால் திட்டம் காலதாமதம் ஆகும் என்பதை கருத்தில் கொண்டு, திட்டத்தை விரைந்து துவங்கவும் முடிக்கவும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதியில் இருந்து 20 கோடி ஒதுக்கி இருக்கிறது “