நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை – தமிழக அரசு திட்டவட்டம்
உயிரிய சூழலை பாதுகாக்கும் நோக்கில் நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது.
தேனியில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க 2018-இல் டாடா நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் மையம் அனுமதித்து இருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்காடி வரும் நிலையில், உயிரிய சூழலை கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கு எப்போதும் அனுமதி வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.
புலிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் நடமாடும் பகுதியாக இருப்பதாலும், பல்வேறு சிற்றினங்களின் வசிப்பிடமாகவும் அந்த மலை இருப்பதால், இத்திட்டம் இங்கு வந்தால் அங்கு ஏற்படும் அதிர்வலைகளின் காரணமாக உயிரினங்கள் வேறு ஒரு சூழலைத்தேடு நகரக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ சுற்றுசூழலை நாம் மாற்றிடும் போது அது புவியின் சூழலை நிச்சயம் வேறு ஒரு நிலைக்கு மாற்றிடும். அதை புரிந்து கொண்டு நியூட்ரினோ திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வரும் தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள் “