ஆன்லைன் சூதாட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் என் ரவி!
TN Governor Send Backs Online Rummy Bills Idamporul
ஆன்லைன் சூதாட்ட மசோதாவை திருப்பி அனுப்பி வைத்து இருக்கிறார் தமிழக ஆளுநர் என் ரவி.
ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிப்பதற்காக தமிழக அரசு அனைவரின் ஒப்புதலுடன் ஆளுநருக்கு அனுப்பி வைத்த மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பி வைத்து இருக்கிறார் ஆளுநர் என் ரவி. இதுவரை 45-க்கும் மேலான உயிரை குடித்து இருக்கும் ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிப்பதில் ஆளுநர் ஏன் தயங்க வேண்டும் என்று பல அரசியல் தலைவர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“ கடந்த 150 நாட்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்டங்களின் மூலம் பணத்தை இழந்து 13 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர் “