தமிழகத்தின் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
Heavy Rain Alert For 17 Districts Of TN 26 05 23 Idamporul
தமிழகத்தின் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
“ தமிழகம் மட்டும் அல்லாமல் புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும் மிதமழை முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது “