தமிழகத்தில் நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு!
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏற்கனவே தமிழகத்தில் அமலில் இருக்கும் நிலையில் நர்சரி பள்ளிகள் திறப்பிற்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.
இரண்டு வருடங்களாக குழந்தைகள் பள்ளிகளையும், புத்தகங்களையும் மறந்து கிடந்த நிலையில் தற்போது நர்சரி பள்ளிகள் (LKG,UKG), அங்கன்வாடிகள் நவம்பர் 1 முதல் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. இதற்கு ஒரு தரப்பு பெற்றோர்கள் ஆதரவு அளித்து வந்தாலும், மூன்றாவது அலை குறித்த பயத்தோடு ஒரு தரப்பினர் பயமும் கொள்கின்றனர்.
இது போக பள்ளிகளும் அங்கன்வாடி உறுப்பினர்களும் முறையாக கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்றும், அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளின் அலுவலக உதவியாளர்களும் முக்கியமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது.
“ இந்த இரண்டு வருட இடைவெளியில் ‘அ’ன்னா, ‘ஆ’வன்னா மறந்து ஆன்லைனில் கேம் விளையாட கற்றுக்கொண்ட குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு இழுப்பது என்பது மிகவும் கடினமான காரியம் தான் “