தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்!
Tamilnadu Release Final Voters List Fact Here Idamporul
தமிழகத்தில் மொத்தமாக 6.18 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக 6.18 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதாசாகு தெரிவித்து இருக்கிறார். ஒட்டு மொத்தமாக 3.14 கோடி பெண்கள், 3.03 கோடி ஆண்கள் மற்றும் 8,294 மூன்றாம் பாலின வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.
அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.60,419 வாக்காளர்களும், அதற்கு அடுத்தபடியாக கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் 4,62,612 வாக்காளர்களும் இருப்பதாகவும், குறைந்தபட்ச வாக்காளர்கள் உள்ள தொகுதியாக நாகை கீழ் வேளூரில் 1.72 இலட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ 18-19 வயதில் மட்டும் தமிழகத்தில் 5,26,205 வாக்காளர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது “