வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு, தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிகழ்வதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
தென்கிழக்கு வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிகழ்வதால் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மீத பகுதிகளில் வழக்கத்தை விட இரண்டு அல்லது மூன்று டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ இலங்கையை ஒட்டிய தெற்கு வங்க கடலில் 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் அந்த பகுதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது “