வட மற்றும் தென் தமிழகங்களில் இரு நாட்களுக்கு மழை வாய்ப்பு!
Tamil Nadu Weather Update 10 04 23 Idamporul
வட மற்றும் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் அதன் உட்புற பகுதிகளில் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வெப்ப சலனங்களின் காரணமாக வட மற்றும் தென் தமிழக பகுதிகள் மற்றும் அதன் உட்புற பகுதிகளில் ஒரிரு நாட்களுக்கு மிதமான மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இன்று காலை முதலே ஒரிரு பகுதிகளில் மழை துவங்கி வெப்பத்தை தணித்து வருகிறது.
“ கோடை வெயிலை மழை தணிப்பது மகிழ்வு என்றாலும் கூட, ஒரு சில டெல்டா பகுதிகளில் அறுவடை நேரத்தில் மழை பொழிந்து பயிர்களையும் பாதித்து வருவது விவசாய மக்களை வருத்தத்திற்கு உள்ளாகி வருகிறது “