பொருநை நதி என பெயர் மாற்றம் செய்யப்படுமா தாமிரபரணி?
தாமிரபரணி என்ற பெயரை பொருநை நதி என பெயர் மாற்றம் செய்ய சொல்லி போடப்பட்ட வழக்கில் தமிழக அரசை முடிவெடுக்க சொல்லி இருக்கிறது உயர் நீதிமன்றம்.
திருநெல்வேலி, தூத்துக்குடி சுற்று வட்டாரங்களில் பெரும் பயனை தரும் வற்றாத நதியான தாமிரபரணியின் பெயர் வடமொழி சொல் என்றும், இலக்கியங்களில் இருக்கும் பெயரான பொருநை என்ற பெயரையே நதிக்கு பயன்படுத்த வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக அரசையே முடிவெடுக்க சொல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.
பெயர் மாற்றத்திற்கென ஒரு வழக்கு என்னவோ சரி தான், ஆனால் நீண்ட காலமாகவே தாமிரபரணியில் வெள்ளம் வந்தால் பெரும் பகுதி நீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆதலால் குறுக்கே அணைகட்ட சொல்லி அதனை நல்ல வகையில் பயன்படுத்த சொல்லி பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அது யார் காதில் ஆவது விழுந்தால் நன்றாக இருக்கும்.
“ நதி பாய்ந்தாலும் திருநெல்வேலி, தூத்துக்குடியின் சில பகுதிகளில் குடிநீரை மக்கல் விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். திட்டமிட்டு அணை வகுத்தால் நாளை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் மட்டும் அல்லாது அதை சுற்றி இருக்கும் பகுதிகளும் வளம் பெறும் “