ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ‘தமிழ்’, காரணம் என்ன?
Thamizh Word Trending In Twitter Idamporul
ட்விட்டரில் ‘தமிழ்’ என்ற வார்த்தை ட்ரெண்ட் ஆகி வருகிறது, அதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
கல்லூரி, பள்ளி, நீதிமன்றம் தமிழகத்தின் எந்த மூலையில் தேடி பார்த்தாலும் தமிழ் எனக்கு தெரியவில்லை என்று கூறி பாமக மூத்த தலைவர் ராமதாஸ் அவர்கள் ‘தமிழைத்தேடி’ என்ற ஒரு விவாதத்தை துவங்கி இருக்கிறார். அது தற்போது ட்விட்டரில் பேசுபொருளாகி ‘தமிழ்’ என்ற வார்த்தை உலகளவில் ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது.
“ அவர் சொல்லும் வார்த்தை என்னவோ உண்மை தான், நாளைய தலைமுறையிடம் நம் மொழி, பண்பாடை கொண்டு சேர்ப்பதை தமிழக அரசு உறுதி செய்வது நிச்சயம் அவசியமாகிறது “